டாஸ்மாக்கில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு வருவாய் தரும் துறைகளில் முதன்மையானது டாஸ்மாக். தினந்தோறும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தாலும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கோடிக் கணக்கில் விற்பனை நடக்கும். இவ்வாறு அரசு வருவாயின் கருவூலமாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் கொரோனாவால் மூடப்பட்டன. இதனால் அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.