இந்தியா, சிந்தனைக் களம், பயங்கரவாதம்

இந்து மதத்திற்கு பின்னால் ஒழியும் காவி தீவிரவாதிகள்!

இராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்மந்த் மாவட்டத்தில் ஒரு கொடூரம் நடைபெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தொழிலாளி  “இந்துக்களின் பெருமையை பாதுகாக்கவே” என்ற பெயரில் ஒரு இந்துமத வெறியனால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். அந்த படுபாதகச் செயலை அந்த வெறியன் வீடியோவாகவும் பதிவு செய்து சமூகவலைத் தளங்களில் வெளியிட்டிடுகின்றான் .

(கவனம்: இந்த செய்தி தொகுப்பில் அந்த கொடிய கொலைச்சம்பவம் மங்கலான வீடியோவாக இடம்பெறுகிறது. பலவீனமுள்ளவர்கள் தவிர்க்கவும்)

அந்தக் கொலைகாரனின் பெயர் ஷம்புலால் ரீகர். “லவ் ஜிகாத்” செய்வோர் எவருக்கும் இதே முடிவுதான் என்கின்றான் அந்த வெறியன் . நியூஸ் 18 செய்தியின் படி இந்தக் கொலைகாரனும், அவனுடைய 8 கூட்டாளிகளும் – ஒரு பெண் உட்பட – கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அரை உடலோடு எரிந்த உடல் ஒன்று ராஜஸ்மந்தின் ஓட்டல் ஒன்றில் புதன்கிழமை கைப்பற்றப்பட்டிருக்கிறது. பிறகு போலீஸ் அந்த உடல் வீடியோவில் அடிபட்டும் எரியும் இளைஞர்தான் என்பதை உறுதிபடுத்திருக்கிறது.

இந்தியா டுடே செய்தியின் படி கொலை செய்யப்பட்டவரின் பெயர் முகமது பட்டா ஷேக், அவருடைய பைக் கொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. விவசாயக் கருவிகள் இந்தக் கொலைக்கு பயன்பட்டிருக்கிறது.

இதையடுத்து ராஜஸ்தானில் சில பகுதிகளில் இணையதள சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் இந்த வீடியோவை பகிர்வதை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட காவல் துறையினர் அதிக அளவில் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தக்கொலைத் தாக்குதல் எப்போது நடந்தது என தெளிவாக தெரியவில்லை. எங்களது நாட்டில் லவ் ஜிகாத் செய்ய முயன்றால் இது போன்ற நிலை தான் உங்களுக்கு ஏற்படும்” என சம்பு லால் முஸ்லிம்களை எச்சரித்திருக்கிறான்.கொலை செய்த சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்ததில்லை என்றும் அவர்களிக்கிடையே தனிப்பட்ட பகை இல்லை என்றும் காவல்துறை நம்புவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட முஹம்மத் அஃப்ரசூல், உதய்பூர் நகர் அருகே வசித்து வந்தார். அங்கே பத்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்திருக்கிறார். சம்புலால் குடும்பத்தில் யாருக்கும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே திருமணம் நடக்கவில்லை என நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அந்த வீடியோவில் வன்முறையை தூண்டும் சில விஷயங்களை பேசியிருக்கிறார். எந்த விதமான வன்முறையையும் தவிர்க்க நாங்கள் இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம் ” என ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 19 அன்று ஜெய்ப்பூரில் ஒரு இந்து ஆன்மீக கடையில் லவ் ஜிகாத் அபாயத்தை இந்து பெண்களிடம் எச்சரிக்கும் ஒரு பிரசுரம் விநியோகப்பட்டிருக்கிறதாக, போலீசார் கூறுகின்றனர். அதில் ஒரு பாலிவுட் நடிகை மக்களை எச்சரிப்பதாகவும், மேலும் இரண்டு முஸ்லீம் நடிகர்கள் தமது இந்து மனைவிகளை விட்டு விலகிவிட்டதாகவும் கூறுவதாக இருக்கிறது.

அந்த கடை பஜ்ரங்தள் எனும் இந்துமதவெறி இயக்கத்துடையதாம்.

ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், பாரதீய கவ்ரக்க்ஷ தல் போன்ற காவி தீவிரவாதிககளின்   பயங்கரவாத இயக்கங்கள் நடத்தும்  கொலைகள் இது.

இது முதல் முறையோ இல்லை கடைசியோ அல்ல. மோடி பதவி ஏற்றதும் முஸ்லீம் மக்கள், தலித் மக்கள், ஜனநாயக சக்திகள் கொடூரமாக கொல்லப்படுவதும், ஒவ்வொரு கொலையும் முந்தைய கொலையை விட விகாரமாக இருப்பதும் தொடர்கிறது.

மாட்டுக்கறி பிரச்சினையை விட இந்த “லவ்ஜிகாத்” சதிப் பரப்புரை இந்தியா முழுவதும் சாதாரண ‘இந்துக்களிடம்’ எடுபடும் என்று இந்துமதவெறி அமைப்புகளின் திட்டம்.

இப்போதோ லவ்ஜிகாத்தை முன்வைத்து ஒரு படுகொலை பகிரங்கமாக வீடியோவாக வந்திருக்கிறது. மஹாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி கோட்ஸேவிற்கே சிலைவைத்து கோவில் கட்டிய பயங்கரவாத கும்பல்இனி வருங்காலம் அந்த கொலைகாரன் மாபெரும் இந்து போராளியாக வட இந்தியாவிலும், சங்கிகள் மத்தியிலும் உலா வருவான்.

ஜனநாயக சக்திகள்  நடுநிலையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்துமதவெறியர்கள் மீது போர் தொடுக்க வேண்டிய தருணமிது! என்ன செய்யப் போகிறோம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *