ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் மகனான தேஜ் பிரசாத் யாதவ் கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பாரதி ஜனதா பிரமுகர் அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீடு புகுந்து தாக்குவோம் என ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் வீடியோ மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், பாட்னா மாவட்ட பா.ஜ.க ஊடக தொடர்பாளர் அனில் சானி என்பவர், தேஜ் பிரதாப் யாதவ் கன்னத்தில் அறையும் நபருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவரது வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
பா.ஜ.க தலைவரின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.