அரசியல் களத்தில் இறங்க இப்போது அவசரமில்லை என ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் அரசியல் செய்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசியல் பிரவேசம் குறித்து ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமாக ரஜினிகாந்த் பேட்டி அளித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலை குறித்து ரஜினியின் இந்த குழப்பமான கருத்துக்கள் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
போர் வரட்டும்னு காத்திருக்கேன் அதேபோல் அண்மையில் ரசிகர்களை சந்தித்து உரையாடல் நிகழ்வை நடத்தினார் ரஜினிகாந்த். அப்போது, கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க முடியாது என்று கூறியிருந்தார். மேலும் போருக்காக காத்து இருக்கிறோம் என்றும் கூறினார். போர் வரும் வரை அமைதி காப்போம் என்று கூறினார்.
தமிழ்நாட்டுல சிஸ்டம் சரியில்லை இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று பேட்டி அளித்தார். இதன் காரணமாக ரசிகர்கள் அனைவரும் போருக்கான நேரம் வந்துவிட்டது என்று நினைத்தனர். சிலர் ரஜினி கட்சி தொடங்கிவிட்டார் என்று கூறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பலரும் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி ஆகிவிட்டதாக கூறினார்.
நேரம் வரும் இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் களத்தில் இறங்க காலம் இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார். இதனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.